செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (09:05 IST)

மதுவுக்கு அடிமையான மனோரமா மகன் – தற்கொலை முயற்சி?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் நடிகை மனோரமா மகன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான சிலர் விபரீதமான பல முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாட்களாக மதுவுக்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் விரக்தியடைந்த அவர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆபத்தான நிலையில் ஆயிரம் விளக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூபதி. மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா என்ற கேள்வில் எழுந்துள்ள நிலையில் தொடர்ந்து மது கிடைக்காமல் பலர் விபரீத முடிவுகளை எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.