திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (16:32 IST)

சமூக வலைதளங்களில் அழுக்கை பரப்பக்கூடாது: பிரதமர் மோடி வேண்டுகோள்

எல்லோரும் சமூக வலைதள ஊடகங்களை ஒருபோதும் அழுக்கை பரப்புவதற்காக பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 
பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரனாசியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
எல்லோரும் சமூக வலைதள ஊடகங்கலை ஒருபோதும் அழுக்கை பரப்புவதற்காக பயன்படுத்தக்கூடாது. அவர்களை சுற்றி பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனை பரப்புவதற்காக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மக்கள் கண்ணியத்தின் எல்லைகளை தாண்டி வருகிறார்கள்.
 
பொய்களை பரப்புவதை மூலம் அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு சேதம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அறியவில்லை. பெண்களை பற்றி எழுதுகிறார்கள், கூறுகிறார்கள். இந்த பிரச்சனைக்கு எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது சித்தாந்தத்தையோ சேர்ந்தது இல்லை என்று கூறினார்.