திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (19:38 IST)

மோடி சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்: ராகுல் காந்தி

இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார் எண்ட்ரு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் கட்சியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் மோடியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஐரோப்பிய சென்றுள்ள மோடி அங்கிருந்தும் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தற்போது கூறியுள்ளதாவது:-
 
பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை விவகாரத்தில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீன விவகாரங்களில் கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.