1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (17:14 IST)

முகலாய பெயர் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்: பாஜக தலைவர்

suvendh
முகலாய பெயர் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்: பாஜக தலைவர்
முகலாய பெயர் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு  பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முகலாய தோட்டம் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இடம் தற்போது அமிர்த தோட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 
 
இந்த நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்தி அதிகாரி இது குறித்து கூறிய போது முகலாயர்கள் இந்து மதத்தினர் அதிகம் பேரை கொன்றவர்கள், இந்து மத வழிபாட்டு தலங்களை அழித்தவர்கள்
 
முகலாயர் பெயரில் உள்ள இடங்களை கண்டறிந்து பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மேற்கு வங்காளத்தில் ஜனதா கட்சிக்கு வந்தால் ஒரு வாரத்திற்குள் முகலாய பெயர்கள் உள்ள இடங்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva