திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 28 ஜனவரி 2023 (22:05 IST)

என்.சி.சி பொதுக்கூட்டம்: ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

என்.சி.சி பொதுக்கூட்டம்: ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று என்.சிசி அணிவகுப்பை பார்த்ததுடன், என்.சி.சி ன் 75 வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் வெளியிட்டார்.

நாட்டின் தலை நகர் டெல்லியில், கரியப்பா பரேட் மைதானத்தில் என்.சிசி. பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி என்.சி.சி அணிவகுப்பைப் பார்வையிட்டார். அதன்பின்னர், 75 வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் வெளியிட்டார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:    இந்தியாவை நோக்கி உலகின்  பார்வை செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்குக் காரணம் இந்தியாவிலுள்ள இளைஞர்கள்.  நம் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும்  போலீஸ் மற்றும்  ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

நம்   நாட்டை எதோ  ஒரு காரணத்தைக் கூறி பிரிக்க முயற்சிக்கின்றனர். அம்முயற்சிகள் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.