1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (11:03 IST)

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Thirupathi Temple
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.