வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (07:18 IST)

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ஒரே விலையாக விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை முதல் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவை பொருத்தவரை பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் மாநில அரசு வரியை குறைத்தது போல் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.