வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:25 IST)

12 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லை: இன்று எப்படி?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து 100 ரூபாய்க்குள் பெட்ரோல் விலை விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவதால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது
 
கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று 13வது நாளாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை பின்வருமாறு
 
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96
 
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.26