1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:49 IST)

பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபர் கைது

train
உத்தரபிரதேசத்தில் பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது ரிதேஷ் என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து அந்த  நபரை போலீஸில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ரயில் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.