1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:52 IST)

பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்

dmk
அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாமியாரின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அரசியலில் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில்,  பாஜக உள்ளிட்ட கட்சிகள்  உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இதையடுத்து நேற்று, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார், ‘உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  வேலூரில் திமுகவினர் அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாமியாரின் உருவ  பொம்மையை எரித்தனர்.