செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (18:03 IST)

ரூ.12 லட்சம் மின்சார கட்டணத்தால் அதிர்ச்சி அடைந்த நபர்..

ebbill
புதுச்சேரியில்  வசித்து வரும் ஒரு நபருக்கு ரூ.12 லட்சம் மின்சாரக்கட்டணம் வந்துள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

புதுச்சேரியில் வசித்து ஒரு தனியார் மையத்திற்கு மின்சாரத்துறையை மாற்றும் நடவடிக்கை நடந்து வரும்  நிலையில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மின்கணகெடுப்புக்கு  யாரும் வராத நிலையில், இரு மாதங்களுக்கும் சேர்த்து  நுகர்வோர் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவையில்  விஸ்வ நாதன்  நகரைச் சேர்ந்த பாதுகாவலர் சரணன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது.

இவருக்கு மாதம் தோறும் ரூ.800 வந்துகொண்டிருந்த நிலையில், அவருக்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது,இதுகுறித்து மின் துறை அலுவலகத்திற்குச் சென்று கேட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த முறை இவர் ரூ.21000 கட்டிய நிலையில், இம்முறை ஒரு பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பிழை எனத் தெரியவந்துள்ளது. இம்முறை அவர் ரூ.5 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தியுள்ளார்.