ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (16:48 IST)

அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு இருந்த நபர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்!

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
 
காரமடை அருகே வந்த பேருந்து அதி வேகமாக வந்த சூழலில் காரமடை அடுத்த ரவி ராம் திருமண மண்டபம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து அங்கிருந்த மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக் கொண்டிருந்த ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் என இருவர் பலத்த காயமடைந்தனர்.
 
அதில் முட்டை ஏற்றிக் கொண்டிருந்த முருகன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தொடர்ந்து படுகாயம் அடைந்த நபர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநரை பிடித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.