1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (18:18 IST)

பெண் யூடியூபரை முத்தமிட முயன்ற நபர்கள்

south korean youtuber
தென் கொரிய நாட்டைச் சேர்ந்த யூடியூபர்  மியோச்சியை  மும்பையில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது,  சில நபர்கள் அவரை முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய  நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மியோச்சி. இவர் பல நாடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.

தற்போது, இந்தியா வந்துள்ள அவர் மஹாராஷிர மாநிலம் மும்பையில் தங்கியுள்ளார். நேற்றிரவு  நியோச்சி, வீடியோ எடுக்கும்போடு, சாலையில் அந்த வழியே வந்த 2 இளைஞர்கள் அவரின் கையைப் பிடித்து, முத்தமிட முயன்றனர்.

லைவ் வீடியோவிலும் அது பதிவானது. இந்த வீடியோ வைரலான  நிலையில், போலிஸார் 2 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
Edited by Sinoj