செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (15:27 IST)

கொரோனா பீதியால் தனது கௌரவத்தை இழந்த அம்பானி !

கொரோனா பீதியால் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்துள்ள நிலையில் அம்பாணி தனது கௌரவத்தை இழந்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பீதியால் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவினை சந்தித்துள்ளது. இதனால் பெட்ரோல் சந்தையை இந்தியா முழுவதும் வியாபித்துள்ள அம்பானிக்கு பொருளாதார அடி ஏற்பட்டுள்ளது. அவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு கீழே சென்றுள்ளன.

இதுவரை அவர் 56,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தனது ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார். சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா இப்போது நம்பர் 1 பணக்காரர் ஆகியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தன்னிடம் இருந்த இந்த கௌரவத்தை அம்பானி இழந்துள்ளார்.