திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:35 IST)

குளியலறையில் பேனா கேமிரா.. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது..!

கல்லூரி மாணவி குளிப்பதை பேனா கேமரா வைத்து வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்ற பகுதியில் ஒரு வீட்டில் தாய் மற்றும் கல்லூரி படிக்கும் இரண்டு மகள்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் இளைய மகள் சமீபத்தில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு பேனா விழுந்தது. அந்த பேனா எப்படி அங்கே வந்தது என அவர் சோதனை செய்து பார்த்தபோது அதில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிய வந்தது

இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவி உள்பட 3 பெண்களும் குளிக்கும் போது எடுத்த காட்சிகள் அதில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த பேனா கேமராவை வைத்தது அவர்கள் வீட்டில் உள்ள பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் என்பது தெரிய வந்தது

இதனை அடுத்து அந்த இளைஞரையும் அதை குளியலறையில் வைக்க அவருக்கு உதவியாக இருந்த அவருடைய சகோதரியின் கணவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பத்தனம்திட்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva