வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:26 IST)

வாகனத்தில் 205 கிலோ குட்கா கடத்தல்..! துரத்தி சென்று பிடித்த போலீசார்..

Gutka Seized
திருவள்ளூர் அருகே வாகனத்தில் கடத்தி வந்த 205 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
 
திருவள்ளுர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை மற்றொரு வாகனத்தில் மாற்றப்பட்டு திருநின்றவூர் நோக்கி கொண்டு செல்லப்படுவதாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து செவ்வாப்பேட்டை தனிப்படை  போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து,  காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வாகனத்தில் சோதனை செய்தபோது சுமார் 205 கிலோ மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் நவீன் குமார் (33)என்பவரை கைது செய்தனர்.
 
குட்கா பான் மசாலா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, யார், யார் அதற்கு தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 
ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையர்  அய்மான்  ஜமால் என்பவர் நேரடியாக சென்று கடத்தல் கொண்டு வந்த பான் மசாலா நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.