1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:05 IST)

வீம்புக்கு நிர்வாணமாக திரியும் நோயாளிகள்: முகம் சூளிக்கும் நர்சுகள்!

டெல்லியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருக்கும் நோயாளிகள் சிலர் அநாகரீகமாக நடந்துக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், அண்டஹ் கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த 6 பேரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலும், செவிலியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும், மருத்துவமனை வளாகத்திற்குள் நிர்வாணமாக உலாவியும் தொல்லை செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதானல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.