1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:56 IST)

வேற யாரும் ஸ்பான்சர் பண்ணலைனா நான் வருவேன்! – ஐபிஎல் விவகாரம்; பாபா ராம்தேவ் விளக்கம்!

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கு பதஞ்சலில் நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை என மறுத்துள்ள நிறுவனர் பாபா ராம்தேவ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சீன செயலிகள், நிறுவனங்கள் பல தடை செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன செல்போன் நிறுவனமான விவோவும் விலக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் இடத்திற்கு காலியிடம் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பதஞ்சலில் நிறுவனர் பாபா ராம்தேவ் இதுவரை ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு முன்வராத நிலை ஏற்பட்டால் அப்போது பதஞ்சலி ஸ்பானசராக வரும் என கூறியுள்ளார்.

மேலும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ள அவர் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் பெற சொல்லி பலர் தன்னிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.