பாஸ்போர்ட்டில் சிப்... சேவைகளில் அதிரடி மாற்றம்: விவரம் உள்ளே!!
பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பாஸ்போர்ட்டில் சிப் பொருத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பதியேற்றதும் முதல் முறையாக ‘பாஸ்போர்ட் சேவா திவாஸ்’ எனும் விழாவில் கலந்துக் கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியது பின்வருமாறு,
பாஸ்போர்ட்டில் சிப் ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளோம். பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வரும். மேலும் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் துவங்கும். தற்போது ஆண்டிற்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது என குறிப்பிட்டார்.