வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:02 IST)

உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

உத்தர பிரதேச மாநில முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளம் மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த கருத்துக்கு கேரள மாநில முதல்வர் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது 
 
உபி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து மக்களவையில் இருந்து வெளியேறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது