ஜனவரி இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. தேர்தல் வருவதால் இடைக்கால பட்ஜெட்?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 27 தொடங்க இருப்பதாகவும் வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்வார் என தெரிகிறது.
இந்த பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்பட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் பிப்ரவரி 9ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva