1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. parliament attacker neelam devi education

பாராளுமன்றத்தில் புகைக்குப்பி.. கைதான நீலம்தேவி M.Phil மற்றும் NET தேர்ச்சி பெற்றவரா?

நீலம் தேவி
நேற்று நாடாளுமன்றத்தில் புகைக்குப்பி வீசியதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நீலம் தேவி குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.குறிப்பாக நீலம் தேவி M.Phil படித்து NET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கைதான நீலம் தேவி BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil மற்றும் NET ஆகியவை படித்துள்ளதாக கூறிய அவரது இளைய சகோதரர் அவர் டெல்லி சென்றதே எங்களுக்கு தெரியாது என்றும் அவர் படிப்புக்காக கல்லூரியில் இருக்கிறார் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் என்றும் கைது குறித்த செய்தி தொலைக்காட்சியில் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி தங்களுக்கு தெரியும் என்று கூறினார்.  

பெரிய படிப்பு படித்து வேலை கிடைக்காததால் கவலையுடன் இருந்ததாகவும் நீலம் தேவி  திறமையானவர் என்றும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்ததால் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1000 உயர்வா?