நதியாவை மிஞ்சும் மகள்கள்… இயக்குனர்கள் கண்ணு படாம இருக்கணும்!
நடிகை நதியா தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இருக்கும் அவரது இரண்டு மகள்களும் அழகில் நதியாவை மிஞ்சும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அவர்களும் நதியா போல சினிமாவில் நடிக்க வேண்டுமென்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.