1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (14:14 IST)

அருண் ஜெட்லி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்...

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது.  இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 66 ஆகும்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று காலமானார். இன்று மதியம் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
அவரது மரணம் பாஜகவிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படும் நிலையில் கட்சிக்கு அப்பாற்பட்டு தலைவர்கள் பலர் அருண் ஜெட்லி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :  தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும்  பேசக்கூடியவர்; கொள்கை மாறுபட்டாலும்  பிற கட்சியினருடன் அன்பாக பழகக்கூடியவர் ஜெட்லி என்று தெரிவித்துள்ளார்.