திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (07:22 IST)

கால்வான் எங்களுக்கே சொந்தம்: நள்ளிரவில் வெளியான சீனாவின் அறிக்கையால் பரபரப்பு

நள்ளிரவில் வெளியான சீனாவின் அறிக்கையால் பரபரப்பு
கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு திடீரென சீன ராணுவ வீரர்கள் இந்தியாவின் எல்லையான கால்வான் பள்ளத்தாக்கிற்கு நுழைந்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 43 வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
சீனா அத்துமீறி இந்திய பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் நுழைந்ததே இந்த மோதலுக்கு காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டது. அதில் கால்வாய் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது என்றும் அதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கால்வான் பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த பகுதியும் சீனாவுக்கு உரிமை என திடீரென நேற்று நள்ளிரவு சீனாவிடம் இருந்து வெளியான அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் அத்துமீறிய தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் சீனா உலக நாடுகளின் கண்டனத்தை கண்டுகொள்ளாமல், மீண்டும் கால்வான் பள்ளத்தாக்கு விஷயத்தில் வம்பு இழுக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கருதப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது