புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (17:26 IST)

அயோத்தியில் நுழைந்த பாக். பயங்கரவாதிகள்... உளவுத்துறை எச்சரிக்கை!

அயோத்தியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில், ஜார்க்கண்டில் பாக்கூர் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எண்ணி 4 மாதங்களில் அயோத்தியில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார். 
 
ஆனால், இப்போது அயோத்தியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இது குறித்து வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு.... 
 
அயோத்தியில் தாக்குதல் நடத்துமாறு சமூக வலைதளம் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வீடியோ மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேலும், பாகிஸ்தானிலிருந்து 7 பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக  உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், அயோத்தியில் ஊடுருவி பதுங்கி இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.