திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (09:53 IST)

குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள் ..

இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாகிஸ்தான் இந்து அகதிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேரணி நடத்தினர். இது குறித்து ஒரு அகதி, “கடந்த 57 வருடங்களாக எங்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இனி நாங்கள் சிறப்பாக வாழ இந்த சட்டம் உதவும்” என கூறியுள்ளார்.