1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian-American Mayoral Candidate Slammed as "Crazy" by President in New York Election!

இந்திய வம்சாவளி வேட்பாளர் ஒரு பைத்தியம்.. டிரம்ப் விமர்சனத்தால் பரபரப்பு..!

நியூயார்க் மேயர் தேர்தல்
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் போட்டியிடும் நிலையில், அவரை அமெரிக்க அதிபர் "பைத்தியம்" என்று விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நியூயார்க் நகர மேயர் தேர்தல் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், இந்திய வம்சாவளி எழுத்தாளர் மஹ்முத் மம்தானி மற்றும் பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகன் சோக்ரன் மம்தானி போட்டியிட்டனர். இதில், சோக்ரன் மம்தானி வெற்றி பெற்றார். இவர் தற்போது குயின்ஸ் தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக இருக்கும் நிலையில், இவருக்கு நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மம்தானி பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஜனநாயகக் கட்சியினர் எல்லை மீறிவிட்டனர். 100% கம்யூனிஸ்ட் பைத்தியம்தான் மம்தானி. அவர் புத்திசாலி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாலஸ்தீனத்தின் தீவிர ஆதரவாளராக மம்தானி கருதப்படும் நிலையில், நியூயார்க் மக்களின் வாழ்க்கை செலவைக் குறைப்பதை தனது முக்கிய நோக்கமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். தான் மேயர் பதவி ஏற்றவுடன் வாடகை உயர்வை கட்டுப்படுத்துவேன் என்றும், மக்களுக்கு தேவையான வீடுகளை உருவாக்குவேன் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். பணக்காரர்களுக்கு அதிக வரியை செலுத்துவதன் மூலம் இந்த செலவுகளுக்கான நிதியை திரட்டுவேன் என்றும் அவர் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!