செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (14:58 IST)

5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கட்சித்தாவல்: ஒவைசி கட்சியின் பரிதாப நிலை!

Owaisi
பீகார் மாநிலத்தில் ஒவைசி கட்சியில் ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் கட்சி மாறிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த  5 எம்எல்ஏக்களின் சிலர் மாற்றுக் கட்சிக்கு மாற இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் உள்ள 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனது கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென கட்சி மாறியிருப்பது ஒவைசி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது