திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (17:42 IST)

தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்

delhi
தலைநகர் டெல்லியில் இன்னும் சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் மிக அதிகமாக உள்ளது. அதேபோல் ஹரியானா பஞ்சாப் உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வெப்பம் அதிகரித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரியானா பஞ்சாப் டெல்லி உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது