1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (10:16 IST)

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

snow
கடும்குளிர் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சண்டிகர் நகர பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சண்டிகர் நகர மக்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
மேலும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தை மறைத்துக் கொள்ளும் வகையில் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கு ஏற்கனவே சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva