செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:35 IST)

ரஜினி= சச்சின், கமல் =கங்குலி…. அப்போ அஜித் விஜய் ? –அருண்விஜய்யின் தேர்வு!

அருண் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் ஒப்பிட்டு நடிகர் அருண் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும் இப்போதுதான் அருண் விஜய்க்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அவர் நடித்த குற்றம் 23, தடம் மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் மாஃபியா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அது சம்மந்தமாக அளித்த ஒரு நேர்காணலில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை எந்தெந்த கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடுவீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர், விஜய்யை கோலியுடனும், அஜித் தல தோனி போன்றவர் என்றும், ரஜினியை சச்சினோடும், கமலை கங்குலியோடும் ஒப்பிட்டு பதிலளித்தார்.