1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:23 IST)

முட்டி மோதும் காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா.. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சாதகமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை முட்டி மோதிக் கொண்டிருப்பதால் பாஜகவுக்கு சாதகமாக களம் மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் கூட்டணியாக போட்டியிடும் நிலையில் இந்த கட்சிகளுக்குள் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடியவில்லை என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் உத்தவ் தாக்கரே ஆகியோர் மாறி மாறி சில தொகுதிகளை தங்களுக்கே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதால், சரத் பவார் இந்த விஷயத்தில் பஞ்சாயத்து செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று முடிவு செய்தாலும் எந்தெந்த தொகுதிகளை யார் எடுத்துக் கொள்வது என்பதில் தான் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 147 தொகுதிகள் போட்டியிட்ட நிலையில் தற்போது 85 தொகுதிகள் என்று இறங்கி வந்துள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அந்த கட்சியும் 85 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்னும் சமூகமாக முடிவடையாததால் இந்த மோதல் பாஜகவுக்கு ஆதரவாக தான் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 23ஆம் தேதி மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva