திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:14 IST)

பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நினைக்கிறேன்: ராதிகா

பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நினைக்கிறேன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து நடிகை ராதிகா பேசி உள்ளார்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா ‘தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரவர் பாதையில் அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சி தான்.

விஜய் மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அதையும் மீறி அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம். சிறுவயதில் இருந்தே எனக்கு விஜய்யை தெரியும். அவர் தந்தையின் இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளேன். அப்போதே நான் விஜய்யை பார்த்திருக்கிறேன்.

விஜய் எடுத்திருக்கும் அரசியல் முடிவு வித்தியாசமாக இருக்கிறது. பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நினைக்கிறேன். அவரது கண்ணோட்டம், அவரது அரசியல் வேறு. அவர் எப்போதும் அதிகம் பேசவே மாட்டார், ஆனால் மாநாட்டில் வேறு விஜய்யை பார்ப்பது போல் இருந்தது.

திராவிட மாடலை எதிர்க்கிறேன் என்று விஜய் சொல்லி இருக்கிறார். நான் கேள்விப்பட்டவரை பெரியாரின் அடிப்படையை நாத்திகம், மூடநம்பிக்கை எதிர்ப்பது தான், அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார்’ என்று நடிகை ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva