1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மே 2024 (15:18 IST)

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு.. எத்தனை நாள் தரிசிக்கலாம்?

ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கும் நிலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட இருப்பதாகவும் மே 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டதாகவும் 19ஆம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினந்தோறும் காலை நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் வைகாசி மாத பூஜையுடன் 19ஆம் தேதி கோயில் பிரதிஷ்டை செய்த தினம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran