ஆவணி மாத பூஜைக்காக இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு: குவியும் பக்தர்கள்..!
ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் நிலையில் ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை முதல் சபரிமலை கோயில் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று மாலை ஐந்து மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என்றும் மேல் சாந்தி முன்னிலையில் கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் 21 ஆம் தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அனைத்து வகையான பூஜை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் தரிசனம் செய்யும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Edited by Mahendran