திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (06:57 IST)

தீபாவளிக்கு 5 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்..!

Train
தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ள நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பொதுமக்கள் இந்த ரயில்களில் முன்பதிவு செய்து மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:

1. சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  அக்.30ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

2. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் அக்டோபர் 29ம் தேதி  இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் ( மதியம் 12.15 மணிக்கு சென்றடையும்.

3. தாம்பரம் – கன்னியாகுமரி:

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 28ம் தேதியான திங்கட்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு வண்டி எண் 06049 புறப்பட்டு கன்னியாகுமரிக்கு செவ்வாய்கிழமை மதியம் 12.15 மணிக்கு செல்கிறது.

4. சென்னை சென்ட்ரல் முதல் மங்களூர் வரை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மங்களூர் ரயில்  நவம்பர் 2ம் தேதி (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. அடுத்த நாள் (ஞாயிறு) காலை 10 மணிக்கு செல்கிறது.  

5. பெங்களூரு- கொச்சுவேலி அந்த்யோதயா ரயில்

பெங்களூரு- கொச்சுவேலி அந்த்யோதயா ரயில் நவ.4 ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

Edited by Siva