வெங்காயத்தின் விலை குறைய தொடங்குகிறதா??
வெங்காய ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் அதன் விலை குறைய தொடங்கி விட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும், அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும், நல்ல பலன் தர தொடங்கியுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு, தற்போது 25 ஆயிரம், டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும், அதனை கொண்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.