1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (07:51 IST)

திடீரென விலை இறங்கிய வெங்காயம்: என்ன காரணம் தெரியுமா?

வெங்காயத்தின் விலை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விலை ஏறிக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் 200ஐ நெருங்கியதால் ஹோட்டல்களிலும் வெங்காயம் இன்றி உணவுகள் தயார் செய்யப்பட்டன என்பதும், வெங்காயம் அதிகமாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்கள் நிறுத்தப்பட்டன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து மும்பை துறைமுகத்தில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான டன் வெங்காயங்கள் எகிப்தில் இருந்து இறக்குமதியாகி உள்ளன 
 
இந்த வெங்காயங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. தமிழகத்திற்கும் அதிகமான அளவில்ள் எகிப்து வெங்காயங்கள் வரத் தொடங்கி உள்ளன. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரே நாளில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 40 முதல் 60 ரூபாய் வரை குறைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த செய்தி ஒருபக்கம் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த போதிலும் பதுக்கல்காரர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த வெங்காயங்களை அவர்கள் வெளியே விடத் தொடங்கிவிட்டனர் 
 
மும்பையில் இருந்து வந்த எகிப்து வெங்காயம், பதுக்கல்காரர்கள் வெளியிட்ட வெங்காயம் ஆகியவை ஒரே நேரத்தில் மார்க்கெட்டுக்கு வந்துள்ளதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளதாகவும் அடுத்த ஒரு சில நாட்களில் படிப்படியாக வெங்காயத்தின் விலை இறங்கி, கிலோ ஒரு ரூபாய் 30 அல்லது 40 வழக்கம்போல் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது