செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:14 IST)

512 கிலோ வெங்காயத்தின் மதிப்பு வெறும் ரூ.2: விவசாயி கண்ணீர்..!

onion
வெங்காயம் விலை பொதுமக்களுக்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டாலும் அந்த வெங்காயத்தை விளைவித்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதை வழக்கமாக இருந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் அடிமட்ட ரேட்டுக்கு தான் வாங்குகிறார்கள் என்றும் அதனால் விவசாயிகள் எப்போது நஷ்டத்துடனே வீடு திரும்பி கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அரசாங்கமே வெங்காயம் உள்பட காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயி ஒருவர் தான் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை 70 கிலோமீட்டர் பயணம் செய்து சந்தைக்கு எடுத்து சென்றார். சந்தையில் மொத்த ஏலதாரர்கள் அவருடைய வெங்காயத்தை ரூபாய் 512 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. அது மட்டும் இன்இ ஏற்றுமதி செலவு, கூலி, போக்குவரத்து செலவு ஆகிய காரணங்களை காண்பித்து 512 ரூபாயில் 510 எடுத்துக் கொண்டதாகவும் இரண்டு ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
பல நாட்கள் கஷ்டப்பட்டு விளைவித்து 70 கிலோமீட்டர் தூரம் வெங்காயத்தை எடுத்துக் கொண்ட அந்த விவசாயிக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கொடுத்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் அந்த விவசாயிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது
 
Edited by Mahendran