வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (14:47 IST)

மகாராஷ்டிராவில் பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு!

முதல் முறையாக மகாராஷ்டிராவில் பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு!
 
இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் பலர் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து, வெள்ளை மற்றும் மஞ்சல் பூஞ்சை தொற்றுகளும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து தற்போது மகாராஷ்டிராவில் பச்சை புஞ்சை Green Fungus நோயால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.