வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:49 IST)

பிப்ரவரியில் தாக்குமா கொரோனா மூன்றாவது அலை? – நிபுணர்கள் எச்சரிக்கை!

பிப்ரவரியில் தாக்குமா கொரோனா மூன்றாவது அலை? – நிபுணர்கள் எச்சரிக்கை!
ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 23 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என கொரோனா தொற்று பரவலை கணித ரீதியாக கணிக்கும் குழுவில் உள்ள ஐஐடி பேராசிரியர் தெரிவித்துள்ளார். எனினும் இது இரண்டாம் அலை போல அதிக பாதிப்பு கொண்டதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.