வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (19:12 IST)

ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க வேட்டை....நீரஜ் சோப்ராவின் வெற்றியால் முன்னேற்றம்!

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் 65 ஆம் இடத்திலிருந்து 47 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்பில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா  ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது.

ஒலிம்பிக்கில் வரலாற்றில் நீரஜ் சோப்ரா வென்றது  இந்தியாவின் 10 வது தங்கம் ஆகும். ஏற்கனவே இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில்  கடந்த 1928, 1932, 1936, 1948, 1952, 1956,1964,1980 ஆகிய ஆண்டுகளில் தங்க வென்று சாதித்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதித்தார்.

இன்று நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் 65 ஆம் இடத்திலிருந்து 47 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் பங்கேற்றதிலேயே இம்முறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.