வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (12:18 IST)

வெடிக்கும் எலெக்ட்ரி ஸ்கூட்டர்கள்; 6500 ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் நிறுவனங்கள்!

OLA Scooter
சமீப காலமாக இந்தியாவில் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த நிலையில் பல நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்றுள்ளன.

இந்தியாவில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ப்ரொமோட் செய்யப்பட்டு வருகின்றன. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மக்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்கள் முன்னதாக புனேவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓலா இ-ஸ்கூட்டர் தீப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
Scooter Blast

இந்நிலையில் ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்த 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறோம். எங்களின் பொறியாளர்கள் அத்தனை ஸ்கூட்டர்களையும் முழுமையாக தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை விற்ற ஆட்டோடெக் நிறுவனம் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களையும், ப்யூர் இவி நிறுவனம் 2 ஆயிரம் ஸ்கூட்டர்களையும் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.