1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:54 IST)

ரசிகர்களுடன் செல்ஃபி...பிரபல நடிகரின் செல்போன் திருட்டு...

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமல் இவர் தனது செல்போன்  திருட்டுப் போனது எனப் புகார் தெரிவித்துள்ளார்.

 தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமல். இவர் களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி இவர் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற போது தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது இருக்கைக்கு திரும்பி வந்தபோது, அவரது விலை உயர்ந்த செல்போன் திருட்டுப் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் புகார் மனு அளித்துள்ளார்.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.