வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:11 IST)

இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

Cauvery
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது . காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளது.
 
தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என ஆணையம்  உத்தரவிட்டிருந்ததை கர்நாடகா பின்பற்றவில்லை என்ற நிலையில் ஜனவரி மாதம் வரை நிலுவையில் உள்ள 90.532 டிஎம்சி நீரை திறக்க கூட்டத்தில்  தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலாளர்கள், காவிரி தொழில்நுட்ப குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜனவரி 18-ம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகா மாநிலத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva