வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:34 IST)

கடும் வெயில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாநிலம்!

கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம், நாடு முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருவதால் ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
வருடாந்திர மெட்ரிகுலேஷன் தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி, மே 7 வரை நடைபெறும். CHSE-ஆல் நடத்தப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும். முன்னதாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை 11 நாட்களுக்கு கோடை விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.