ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (08:56 IST)

கருப்பு தினம், கருப்புப்பண ஒழிப்பு தினம்: நவம்பர் 8 படும் பாடு

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான நடுத்தர, ஏழை எளிய மக்கள் திண்டாடினர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன



 
 
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுத்து ஒருவருடம் முடிவடைய உள்ளது. இந்த தினத்தை அதாவது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள்  நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கும் என்று அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவம்பர் 8-ம் தேதியை தேசிய கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. ஒரே நாளில் கருப்பு தினம், மற்றும் கருப்புப்பண ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் வரும் நவம்பர் 8 பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.