செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (14:51 IST)

மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தும் திடீரென இந்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்திருப்பதால் இன்கம்டாக்ஸ் ரெய்டு உள்பட வேறு சில பயமுறுத்தல்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.