1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:18 IST)

மீண்டும் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 3210 : HMD நிறுவனம் தகவல்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா 3210 என்ற மாடல் மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக எச்எம்டி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் நோக்கியா 3210  என்ற மொபைல் மாடல் மிகவும் பிரபலம் என்பதும் ஏராளமானோர் இந்த மொபைல் ஃபோனை மிகவும் விரும்பி வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நீண்ட நாள் பேட்டரி சார்ஜ் நிற்கும் என்பது இதன் மிகப்பெரிய பாசிட்டிவ் என்பதும் குறைந்தபட்சம் 22 மணி நேரம் பேசும் அளவுக்கு இதில் சார்ஜ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபலமான சினேக் என்ற கேம்ஸ் இதில் உள்ளது என்பதும் அதில் சில அப்டேட்டுகளுடன் இந்த முறை மீண்டும் புத்துயிர் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4ஜி, புளூடூத், புதுப்பிக்கப்பட்ட ஸ்னேக் கேம்ஸ் ஆகியவை இருக்கும்.

மேலும் கைக்கு அடக்கமாக அதே சமயத்தில் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் நம்பகமான போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் போன் 3210 ரூபாய்க்கு விற்பனை செய்ய விற்பதாகவும் விற்பனை ஆகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva